ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் நிறுவனம் அமெரிக்க ஸ்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கு அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் தடை செய்தது குறித்து நிப்பான் ஸ்டீல் நிறுவனம் அமெரிக்க அரசு மீது வழக்கு தொடுப்பதற்கு ஆதரவு அளிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் 4ஆம் நாளிரவு செய்தி வெளியிட்டது.
அமெரிக்க வெள்ளை மாளிகை 3ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் பைடன் கூறுகையில், நிப்பான் ஸ்டீல் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்தை வாங்கினால், அமெரிக்காவின் மிக பெரிய எஃகு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று, வெளிநாட்டின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும். இது, அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் முக்கிய விநியோகச் சங்கிலிக்கு இடர்பாடுகளைக் கொண்டு வரும் என்று வலியுறுத்தினார்.
3ஆம் நாள் இதற்கு பதில் அளித்த ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் யோஜி முடோ கூறுகையில், அமெரிக்காவின் இச்செயல் வருத்தம் அளிப்பதாக உள்ளது. தேசிய பாதுகாப்பு ரீதியான கவலையை காரணமாகக் கொண்டு இத்தகைய முடிவு எடுத்துள்ளதை புரிந்து கொள்வது கடினம் என்று சுட்டிக்காட்டினார்.