ரஷிய அரசுத் தலைவரின் செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் ஆகஸ்ட் 31ம் நாள் சீனாவின் தியேன் ஜின் மாநகரில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ரஷிய அரசுத் தலைவர் புதின், சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியேன் ஜின் உச்சிமாநாட்டிலும், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவின் நினைவுக்கூட்டத்திலும் பங்கெடுக்கவுள்ளார். இது, பல்வேறு துறைகளிலான ரஷிய-சீன ஒத்துழைப்புகளை முன்னேற்றுவதோடு, பாசிசவாதத்தைத் தோற்கடிக்க இரு நாடுகளின் முக்கிய பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. வரலாற்றை மனதில் பதிந்து, இவற்றைப் பிந்தைய தலைமுறைக்குப் பரப்ப இரு நாடுகள் விரும்புகின்றன என்று தெரிவித்தார்.