தனது நாடு அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்பட்டால் அது அணு ஆயுதப் போருக்கு அழைப்பு விதிப்பதற்கு சமம் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மேற்கத்திய நாடுகளை எச்சரித்தார்.
“இராணுவ-தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம்,” என்று கூறிய அவர், ஆனால் இப்போது அதற்கான தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அதிபர் விளாடிமிர் புதின் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அவர் கண்டிப்பாக வெற்றி பெற்று இன்னும் 6 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருப்பார் என்று நம்பப்படுகிறது.