சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்தியின்படி, 2026ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறை பற்றிய உலகளாவிய உயர்நிலை கூட்டம் ஜூலை 17 முதல் 20ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இம்மாநாட்டின் துவக்க விழாவில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
