சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், மே 16ம் நாள் காலை, பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் அரசு முறை பயணம் மேற்கொள்ள வந்தடைந்த ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினைச் சந்தித்து, சிறிய அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார்.
மதிப்புள்ள ரஷிய அரசுத் தலைவர் புதின் அவர்கள், எனக்கு பழைய நண்பர் ஆவார். சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள வரவேற்கின்றேன். கடந்த வாரத்தில், நீங்கள் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்து, 5ஆவது முறை அரசுத் தலைவர் பதவிகாலத்தைத் தொடங்குகிறீர்கள். உங்களுக்கும் மற்றும் ரஷியாவின் மக்களுக்கும் மீண்டும் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். உங்களுடைய தலைமையில், ரஷியாவின் வளர்ச்சி மற்றும் கட்டுமானம் புதியமான, மேலதிகமான சாதனைகளைப் பெறும் என்பது உறுதி என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
இரு நாடுகளின் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவு தொடர்புடைய கொண்டாட்டங்கள் என்பது இவ்வாண்டின் இரு நாடுகளின் உறவு வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களாகும். இரு தரப்புறவு, நூற்றாண்டின் நான்கில் மூன்று பகுதியைத் தாண்டி, இன்னல்களைச் சமாளித்து, பல சோதனைகளைக் கடந்து நிலைத்து நின்றுள்ளது. பெரிய வல்லரசு, மதிப்பளிக்கும் அண்டை நாட்கள், நேர்மையான மனப்பாங்கில் கையாண்டு, சுமுகமாகப் பழகி, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் முன்மாதிரிகளை உருவாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், உங்களுடன் இணைந்து 40க்கும் மேலான முறையாக சந்தித்துரையாடினேன்.
உங்களுடன் நெருக்கமாக தொடர்புகொண்டு, இரு தரப்புறவின் சீரான, நிதானமான, தடையில்லாத வளர்ச்சிக்கு நெடுநோக்கு வழிகாட்டுதலுக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம். தற்போதைய சீன-ரஷிய உறவை உறுதியானதும். இரு தரப்புறவுக்கு மதிப்பளிக்கப்படத்தக்கது.
இரு தரப்புறவின் நிதான வளர்ச்சி, இரு நாடுகள் மற்றும் மக்களின் அடிப்படைய நலன்களுப் பொருந்தியது. பிரதேசம் மற்றும் உலகின் அமைதி, நிதானம் மற்றும் செழுமைக்குத் துணை புரியும். புதிய வளர்ச்சிக்காலக்கட்டத்தில், ரஷியாவுடன் சேர்ந்து, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கை வாய்ந்த அண்டை நாடுகளாகவும், நண்பராகவும், கூட்டாளிகளாகவும் விளங்க சீனா பாடுபடும். இரு நாட்டு மக்களுக்கிடையில் தலைமுறையான நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்தி, தத்தமது நாடுகளின் வளர்ச்சி மற்றும் மலர்ச்சியை நனவாக்கி, கையோடு கை கோர்த்து, உலகின் நியாயத்தையும் நீதியையும் பேணிக்காக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.