தொடர்புடைய பிரச்சினைகளை உரிய முறையில் தீர்ப்பதற்கான திட்டங்கள்  குறித்து சீனாவும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமாக விவாதித்து அடிப்படையான பொது கருத்துகளை உருவாக்கியுள்ளது:சீன துணை வணிக அமைச்சர் லீ ட்செங் காங்

தொடர்புடைய பிரச்சினைகளை உரிய முறையில் தீர்ப்பதற்கான திட்டங்கள்  குறித்து சீனாவும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமாக விவாதித்து அடிப்படையான பொது கருத்துகளை உருவாக்கியுள்ளது:சீன துணை வணிக அமைச்சர் லீ ட்செங் காங்

 

சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு பிரதிநிதிகள் கோலாலம்பூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைப் பிரதிநிதியும் துணை அமைச்சருமான லீ ச்செங் காங் 26ஆம் நாள் கூறுகையில், ஏற்றுமதிக்கான கட்டுபாட்டு நடவடிக்கை, பரஸ்பர சுங்க வரி வதிப்பை நிறுத்தி வைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது, ஃபெண்டானில் சுங்க வரி மற்றும் ஃபெண்டானிலுடன் தொடர்புடைய  போதைப் பொருட்கள் தடுப்பு ஒத்துழைப்பு, வர்த்தக அளவை விரிவாக்குதல், அமெரிக்காவின் 301கப்பல் கட்டணம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்தின என்று தெரிவித்தார். அமெரிக்கா கடினமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. சீனா உறுதியுடன் தனது நலன்களைப் பேணிக்காத்தது. தீவிர விவாதம் மேற்கொண்டு சீனாவும் அமெரிக்காவும் இரு தரப்பினரின் கவலைகளை தீர்ப்பதற்கான திட்டங்களை ஆக்கப்பூர்வமாக விவாதித்து, அடிப்படையான ஒருமித்த கருத்துகளை உருவாக்கியுள்ளன. அடுத்த கட்டமாக உள் ஒப்புதல் நடைமுறைகளில் செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author