மொத்த விற்பனையில் தயாரிப்பு துறையின் பங்கு

Estimated read time 0 min read

சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகத்தின் தகவலின்படி, 2025ம் ஆண்டில் தேசிய மொத்த விற்பனை மதிப்பில், தயாரிப்புத் துறையின் மதிப்பு 29.7 விழுக்காடு வகிக்கிறது.

இதற்கிடையில் தயாரிப்பு துறையின் நுண்ணறிவுமயமாக்க மாற்றம், எண்ணியல்மயமாக்க சீரமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சி போக்கு வேகமடைந்து வருகின்றன.

நுண்ணறிவு சாதனத் தயாரிப்புத் துறையின் விற்பனை வருமானம், 2024ம் ஆண்டு இருந்ததை விட 28.1 விழுக்காடு அதிகரித்தது. எண்ணியல் பொருட்கள் தயாரிப்புத் துறையின் விற்பனை வருமானம், 2024ம் ஆண்டு இருந்ததை விட 9.4 விழுக்காடு அதிகரித்தது.

எண்ணியல் பொருளாதாரம், நடைமுறை பொருளாதாரத்துடன் மேலும் ஆழமாக ஒன்றிணைத்து வருகிறது என்று வெளிக்காட்டப்பட்டது.

You May Also Like

More From Author