ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு?

Estimated read time 0 min read

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா, வரும் ஜூலை 19 நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி தெரிவித்துள்ளது.
39 வயதான ரோஹித் சர்மாவின் 19 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் சகாப்தம் இப்போட்டியுடன் முடிவுக்கு வரவுள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியத் தேர்வுக் குழு 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு இளைய தலைமுறை வீரர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி தயார்படுத்த தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author