20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

Estimated read time 0 min read

தமிழ்நாட்டில் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தலைமைச் செயலாளராக இருக்கும் பிரதீப் யாதவ் இடமாற்றம் செய்யப்பட்டு நுண், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுல் ஆனந்த் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தீரஜ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, உயர்கல்வித் துறையின் செயலாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் செயலாளராக இருக்கும் காகர்லா உஷா, இடமாற்றம் செய்யப்பட்டு சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம் மற்றும் வனத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு அருண் ராய் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக ராதாகிருஷ்ணனை நியமித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்த உமாநாத், தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்

You May Also Like

More From Author