“பழைய ரேஷன் கார்டுக்கு குட்பை!”… ரேஷன் பொருள் விவரம் இனி உங்க போன்லயே!…

Estimated read time 1 min read

டெல்லி அரசு தனது பொது விநியோகத் திட்டத்தை நவீனப்படுத்தும் நோக்கில், அதிநவீன க்யூஆர் (QR) குறியீடு வசதி கொண்ட புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய அட்டை மூலம், ரேஷன் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விவரங்களை பொதுமக்கள் இணையதளம் வாயிலாகவே எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, ரேஷன் பொருட்கள் வாங்கும்போது பயோமெட்ரிக் முறையில் கைரேகை மற்றும் முக அடையாளங்களைச் சரிபார்க்கும் வசதியும் இந்த அட்டையில் இணைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய உயர் தொழில்நுட்ப மாற்றங்கள் மூலம், போலி ரேஷன் அட்டைகளை முற்றிலும் ஒழிப்பதையும், தகுதியுள்ள பயனாளிகளுக்குச் சேவைகள் தடையின்றி கிடைப்பதையும் உறுதி செய்ய டெல்லி அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்த புதிய ஸ்மார்ட் கார்டு முறை அமலுக்கு வரும்போது, டெல்லியில் ரேஷன் விநியோக முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author