சோங்ச்சிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவு விபத்து குறித்து ஷிச்சின்பிங் உத்தரவு

சோங்ச்சிங் மாநகரின் பெங்ஷுய் மாவட்டத்தில் ஜுலை 17ஆம் நாள் ஏற்பட்ட நிலச்சரிவு விபத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். இதனைத் தொடர்ந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பிறப்பித்த முக்கிய உத்தரவில்,

தேடுதல் மற்றும் மீட்பு பணியை அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளவும், இரண்டாம் நிலை பேரழிவுகளைத் தடுக்கவும், காயமடைந்தவர்களுக்கான சிகிச்சையையும் விபத்துக்குப் பிந்தைய நிவாரண பணியையும் சீராக மேற்கொள்ளவும் வேண்டும் என்றும், விபத்துக்கான காரணங்களை விசாரணை நடத்தி, புவியியல் பேரழிவுகள் ஏற்படக்கூடிய அபாயங்களை ஆழமாக ஆய்வு செய்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், பல்வேறு இடங்களிலுள்ள தொடர்புடைய வாரியங்கள் பாதுகாப்புப் பொறுப்புகளை மேலும் நடைமுறைப்படுத்தவும், பொது மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை பேணிக்காக்கவும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மீட்புப் பணிகளுக்கு வழிகாட்டும் வகையில், சீன அரசவை துணை தலைமை அமைச்சர் ஜாங் குவோச்சிங் தொடர்புடைய துறைகளின் பொறுப்பாளர்களுக்கு தலைமை தாங்கி, இவ்விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்றார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author