உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!

Estimated read time 0 min read

தீபாவளி விடுமுறையை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் இரண்டாவது சீசன் மற்றும் தீபாவளி விடுமுறையை ஒட்டி உதகையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வண்ண மலர்களை உற்சாகமாகக் கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து அவர்கள் புல்வெளி மைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடியும், குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

You May Also Like

More From Author