தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Estimated read time 0 min read

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, முந்தைய திமுக அரசின் பிடிவாதப்போக்கை தொடராமல், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மும்மொழி கொள்கை என்பது, இந்தி திணிப்பு அல்ல; மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு மூன்றாவது மொழியையும் தேர்வு செய்யலாம் என உச்சநீதிமன்றமே தெளிவாக விளக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதை ஏற்று, பழைய வெற்று அரசியல் காரணங்களை தவிர்த்து, மாணவர்களின் கல்வி நலனை பிரதான நோக்கமாக கொண்டு தவெக அரசு செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அரசு, தன் நிலைப்பாட்டை மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, நவோதயா பள்ளிகளுக்கான நிலங்களையும், உடனடியாக கண்டறிய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author