மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

Estimated read time 1 min read

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி, 12 கோபுரங்களுக்கும் பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 17-ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உள்ளிட்ட 12 கோபுரங்களுக்கும், சுவாமி-அம்மன் தங்க விமானங்களுக்கும் பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கப்படுகின்றன.

இதற்காக பெங்களூரு, ஓசூர், திருச்சி, நிலக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 4.5 டன் மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 40 முதல் 160 அடி உயரம் வரையிலான மாலைகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் 16-ஆம் தேதி இந்த மாலைகள் கோபுரங்களில் அணிவிக்கப்பட உள்ளன.

You May Also Like

More From Author