மதுரை கும்பாபிஷேகம் 2026: மொத்தம் 285 சிறப்புப் பேருந்துகள்! எந்தெந்த ஊரிலிருந்து எத்தனை பஸ்கள்? முழு விவரம்!

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் 17.09.2026 அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான, சீரான மற்றும் தங்குதடையற்ற போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளான 16.09.2026 அன்று KCBT (கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்) முதல் மதுரை வரை 50 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயணத் தேவைக்கேற்ப இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதன் ஒரு பகுதியாக, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து மதுரைக்கு கீழ்க்கண்ட எண்ணிக்கையில் பேருந்துகள் பொதுமக்களின் பயணத் தேவைக்கேற்ப இயக்கப்படும்.

கோயம்புத்தூர் – 30 பேருந்துகள்

திருப்பூர் – 30 பேருந்துகள்

ராமநாதபுரம் – 30 பேருந்துகள்

அருப்புக்கோட்டை – 25 பேருந்துகள்

சிவகாசி – 30 பேருந்துகள்

ராஜபாளையம் – 30 பேருந்துகள்

விருதுநகர் – 10 பேருந்துகள்

தேனி – 30 பேருந்துகள்

திண்டுக்கல் – 20 பேருந்துகள்

மேலும், மதுரை மாநகரப் பகுதியில் திருமங்கலம், மேலூர், திருப்புவனம், வாடிப்பட்டி, நத்தம், பூவந்தி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தலா 20 பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்விழாவை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மொத்தம் 285 சிறப்புப் பேருந்துகள் போக்குவரத்துத் துறையின் சார்பில் இயக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author