தங்கத்தின் விலை சற்று குறைந்திருக்கிறது. உலகளாவிய போர் பதற்றம், அமெரிக்க டாலர் வலுவிழப்பு, பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலையானது கணிக்க முடியாத வகையில் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
ஆனால், இந்தியாவை பொறுத்தவரை இனிவரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதால் தங்கம் விலை பெரும்பாலும் ஏறவே வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், அவ்வபோது விலை குறையவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 14) 1 கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும், ஒரு சவரன் ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.
இன்று (செப்டம்பர் 15) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.680 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.
