தங்கம் விலை குறைந்தது; வெள்ளி நிலவரம் என்ன?

Estimated read time 1 min read

தங்கம் விலை கடந்த ஒரு வார காலமாக ஒரு நாள் ஏறுவதும் மறுநாள் இறங்குவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனால் நகை எப்போது வாங்கலாம்? முதலீட்டுக்கு இது உகந்த நேரமா? என்ற குழப்பம் நிலவி வருகிறது. ஆகஸ்ட் மாதத்தின் பாதியிலிருந்து தங்கம் விலை சற்று குறைந்தது. அதற்கு அமெரிக்க டாலர் மதிப்பு வலுவிழப்பு, பணவீக்கம் போன்ற காரணிகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், இந்த மாதம் நிலைமை அப்படியில்லை. தினசரி விலை மாற்றம் ஏற்படுவதால், முதலீட்டாளர்கள் குழம்பி போயுள்ளனர். இருப்பினும், அமெரிக்காவில் கருவூல பத்திரங்களின் வருமானம் அதிகரித்திருப்பதாலும், ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டுவர இருப்பதாலும் தங்கம் விலை சிறிது காலத்திற்கு நிலையற்றதாக தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

நேற்று (செப்டம்பர் 13) தங்கத்தின் விலை ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.14,170-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,360-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.

இன்று (செப்டம்பர் 14) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 குறைந்து, ரூ.1,13,000-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

You May Also Like

More From Author