பங்களாதேஷ் அமைச்சரவையில் ஒரு இந்து தலைவர்! நிதாய் ராய் சௌத்ரிக்கு அமைச்சர் பதவி  

Estimated read time 1 min read

பங்களாதேஷில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்நாட்டின் தேசியவாத கட்சியின் (BNP) மூத்த தலைவரும், இந்து சமூகத்தை சேர்ந்தவருமான நிதாய் ராய் சௌத்ரி செவ்வாய்க்கிழமை அன்று அமைச்சராக பதவியேற்றார்.
50 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைச்சரவையில் இவரது வருகை, பிஎன்பி தலைமையிலான அரசில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்கள், 24 மாநில அமைச்சர்கள் மற்றும் மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர், அமீர் காஸ்ரு மஹ்மூத் சௌத்ரி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் நிதாய் ராய் சௌத்ரியும் பதவியேற்றார்.
இந்த விழாவில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author