“மதுரையில் உச்சக்கட்டப் பாதுகாப்பு… வரும் 17-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம்… அதிரடி களத்தில் இறங்கிய காவல்துறை உயர் அதிகாரிகள்…!!” 

Estimated read time 1 min read

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பணிகள் குறித்து மாநில காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

வரும் 17-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் DGP மகேஷ் குமார் அகர்வால் தீவிர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கோயில் வளாகம் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான வியூகங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர ரோந்துப் பணிகள் மற்றும் காவல்துறை செயல்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

“>

கும்பாபிஷேகத்தை எந்தவிதத் தடையுமின்றி அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்தி முடிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author