லண்டனின் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், தமிழகத்தில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெத்திட்டுள்ளது.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டன் சென்றுள்ளார். இந்நிலையில், 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக சுமார் 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
