இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியனாக நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை தொட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் வரும் 2026 அக்டோபர் 15-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிலவும் சினிமா வட்டாரத் தகவல்களின்படி, அக்டோபர் 15 வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்படலாம் எனப் பேசப்படுகிறது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் இறுதிக்கட்டப் பணிகளுக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், நவம்பர் 5-ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி மாற்றமா? நவம்பர் 5-ல் வெளியாகிறதா ரஜினியின் திரைப்படம்?
