இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின் போது, நடந்த ஒரு ரிஸ்க்கான கார் ஸ்டண்ட் காட்சியில் மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் (வயது 52) உயிரிழந்தார்.
அந்த படப்பிடிப்பு காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் சண்டைக்காட்சிக்கு பயன்படுத்தப்பட்ட கார் வானத்தில் பறந்து இரண்டு முறை சுழன்று கீழே விழுகிறது.
காரை ஒட்டிய மோகன் ராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
‘வேட்டுவம்’ படத்தை பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார்
