சீன-அமெரிக்க உறவுக்கு நிலைத்தன்மை தரும் புதிய நிலைப்பாடு

பதற்றங்களும் மாற்றங்களும் தீவிரமாக ஏற்படும் சர்வதேச நிலைமையில், சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களின் பெய்ஜிங் சந்திப்பு உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வமான உத்திநோக்கு நிலைத்தன்மையுடைய உறவை இரு தரப்புறவின் புதிய நிலைப்பாடாகக் கொள்வதற்கு இரு தரப்பும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன. இது குறித்து, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலக இணையப் பயனர்களின் மீது கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன்படி, சீன-அமெரிக்க உறவின் புதிய நிலைப்பாடு பதற்றமான உலகத்துக்கு நிலைப்புத்தன்மையைக் கொண்டு வரும் என்றும், உலகின் நிலையான நிலைப்புத்தன்மை

யை உத்தரவாதம் செய்யும் முக்கிய முன்நிபந்தனை இதுவாகும் என்றும் 71.6விழுக்காட்டினர் கருதினர். மேலும், போட்டியை விட, ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாளியுறவுக்கு இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் என்று 69.5விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author