சீனாவின் தொற்றுநோய்த் தடுப்பு நிபுணர்கள் குழு ஒன்று, ஜூன் 2ஆம் நாள், கொங்கோ ஜனநாயக குடியரசின் தலைநகர் கின்சாசாவுக்கு சென்றடைந்துள்ளது. இக்குழு உள்ளூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள எபோலா தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் 3 மாதங்கள் ஈடுபட உள்ளது.
இக்குழுவை அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் பிரதிநிதி லூகு மரியஸ் விமான நிலையத்தில் வரவேற்றார்.
அப்போது அவர் கூறுகையில்,
எபோலா தொற்றுநோய் தடுப்புக்கான முக்கிய காலக்கட்டத்தில், சீனாவின் இம்மருத்துவக் குழு இங்கு வருவது, அரசு மற்றும் மக்களுக்கு உரிய நேரத்தில் வலிமையான ஆதரவுகளாகும் என்றார்.
உலகச் சுகாதார அமைப்பு மே 17ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய எபோலா நோய் தொற்று சர்வதேச அளவில் கவனம் செலுத்தும் திடீர் பொது சுகாதார நிகழ்ச்சியாகும். உலகளவில் தொற்று நோய் பரவலைத் தடுக்கும் வகையில், அந்நாட்டிற்கு உயர் நிலை மருத்துவ நிபுணர்களை சீனா அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
