உலகின் மிக வேகமாக பரவக்கூடிய தீவிர வைரஸ் நோய்களில் ஒன்றான தட்டம்மை, உலகளவில் மீண்டும் பெரும் சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
நடப்பு ஆண்டில் மட்டும் உலகளவில் சுமார் 1.1 கோடிக்கும் அதிகமான மக்கள் தட்டம்மை நோயால் பாதிக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
முக்கியமாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களிலும் இதன் பரவல் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.
மீண்டும் தீவிரமடையும் தட்டம்மை ஆபத்து! தடுப்பூசி குறைபாடே முதன்மைக் காரணம்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
