இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுமார் 20 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தப் பேச்சுவார்த்தை, டெல்லியில் நடைபெறும் உயர்மட்ட உச்சிமாநாட்டின் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்த மாநாட்டில் வர்த்தகம் மட்டுமின்றி, ராணுவக் கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று வெளியாகிறது இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
