சீன ஊடகக் குழுமமும் வங்காளத் தேச தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகமும் ஒத்துழைப்புக் குறிப்பானைகளில் கையொப்பம்

ஜூன் 25ஆம் நாள் வங்காளத் தேசத்தின் தலைமை அமைச்சர் தாரிக் ரஹ்மான் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இருநாட்டுத் தலைவர்களின் முன்னிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சிவுங் பெய்ஜிங்கில் வங்காளத்தேசத்தின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்வாபானுடன், சீன ஊடகக் குழுமம் மற்றும் வங்காளத்தேசத்தின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புக் குறிப்பாணையிலும், சீன ஊடகக் குழுமம் மற்றும் வங்காளத்தேசத்தின் தேசியத் தொலைக்காட்சி நிலையத்தின் ஒத்துழைப்பு ஆழமாக்கக் குறிப்பாணையிலும் கையொப்பமிட்டார்.

 

You May Also Like

More From Author