சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய ஒழுங்கு பரிசோதனைக்கான ஆணையத்தின் (சிசிடிஐ) ஆறாவது முழு அமர்வு 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இவ்வாணையத்தைச் சேர்ந்த 116 உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதில் புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனை குறிப்பாக கட்சியின் கட்டுமானம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையை உறுப்பினர்கள் ஆழமாக கற்றுக்கொண்டு ஆராய்ந்தனர். கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்துவதில் ஒழுங்கு பரிசோதனைக்கான வாரியங்கள் முக்கிய சக்தியாகத் திகழ்கின்றது என்றும், கட்சியின் கட்டுமானம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையின் மீது உறுதியான விசுவாசம் கொண்டு, சீனத் தனிச்சிறப்புடைய சீர்கேட்டு எதிர்ப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாண்டின் முதல்பாதியில் நாட்டின் ஒழுங்கு பரிசோதனைப் பணிகள் இதில் தொகுக்கப்பட்டு, அடுத்தக் கட்டப் பணி தொடர்பாக இலக்குகள் முன்வைக்கப்பட்டன.
