வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

Estimated read time 0 min read

வெளிநாட்டினருக்கு விசா வழங்க அமெரிக்கா விதித்திருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக நீக்கியுள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிரேசில், கொலம்பியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்து விசா பெறுவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி முதல் தடை விதித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மனித உரிமை அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நியூயார்க் மான்ஹாட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, அமெரிக்க குடியேற்றச் சட்டத்தின்படி விசா வழங்கும் அதிகாரம் தூதரக அதிகாரிகளுக்கே உள்ளதாகக் கூறி, விசா தடையை நீக்கி உத்தரவிட்டார்.

You May Also Like

More From Author