திடீரென பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் விஜய்

Estimated read time 1 min read

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தன்னுடைய பெரம்பூர் தொகுதி அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் தனது பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு திடீர் வருகை தந்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார். பெரம்பூர் தொகுதி மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் விஜய் உறுதி அளித்தார். அவ்வலுவலக வளாகத்திலுள்ள இ-சேவை மையத்தில் வருமானச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த பயனாளிக்கு வருமானச் சான்றிதழை வழங்கினார்.

Image

பின்னர் மாதவரம் பால் பண்ணையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ₹2 கோடி மதிப்பிலான கட்டிடத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைப்பார். மேலும், அவர் பால் பண்ணையின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதோடு, புதிய பால் பண்ணை வசதிக்கான கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.

You May Also Like

More From Author