நேற்று இந்தியப் பெருங்கடலில், இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரான் நாட்டின் ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மற்றொரு நாட்டின் கப்பலைத் தாக்கி மூழ்கடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்திய கடற்படை நடத்திய ‘MILAN 2026’ பன்னாட்டு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு, விசாகப்பட்டினத்திலிருந்து ஈரான் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தக் கப்பல் தாக்கப்பட்டது.
மார்ச் 4 அதிகாலை, காலியில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் ‘MK-48’ ரக டார்பிடோ ஏவுகணை மூலம் இக்கப்பல் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை அருகே ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்: அறிக்கை
