தமிழக அரசியலில் பரபரப்பு : இடைத்தேர்தல் முடிந்ததும் ஆதரவு வாபஸ்..?

Estimated read time 0 min read

தவெக ஆட்சிக்கான ஆதரவைத் திரும்பப்பெறுவது தொடர்பாக இடதுசாரி கட்சி தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும், ஆதரவு நிலைபாட்டை கைவிடப்போவதாகவும், இதற்கு தேசிய தலைமையிடம் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டதாகவும் பேச்சுகள் வருகின்றன. இடதுசாரிகளின் ஆதரவு போனால் பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவரவும் ஒருபுறம் ஏற்பாடுகள் தொடங்கியிருப்பதாகவும், இதனால் விசிக கலக்கம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் சமீபத்திய செயல்பாடுகள் தொடர்பாகஇடதுசாரிகள்மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமுறை தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம், அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தொடர்பான முடிவுகள், முதலமைச்சரின் சட்டமன்ற செயல்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இடதுசாரிகளின் அதிருப்திக்கு காரணமாக கூறப்படுகின்றன.இதன் காரணமாகவே தவெக அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறுவது குறித்து இடதுசாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், இடதுசாரிகளின் ஆதரவு இல்லாமலேயே அரசை தொடர்ந்து நடத்தும் சூழல் உருவாகலாம். அதேநேரத்தில், தவெக தோல்வியடைந்தால் அரசியல் களம் வேறு வகையில் மாறக்கூடும் என்ற கருத்துகளும் நிலவுகின்றன.இதுபோன்ற சூழலில், இடதுசாரிகள் ஆதரவை திரும்பப் பெறும் பட்சத்தில் அது தவெக அரசின் நிலைத்தன்மை மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

You May Also Like

More From Author