100 நாட்களில் தவெக எந்த கெட்ட பெயரையும் எடுக்கவில்லை- திருமாவளவன்

Estimated read time 0 min read

ஆட்சி நிர்வாகத்திற்கு புதியவர்கள் தவெகவினர்.. இந்த 100 நாட்களில் பெரிய அளவில் எந்த கெட்ட பெயரையும் எடுக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆட்சி நிர்வாகத்திற்கு புதியவர்கள் தவெகவினர்.. இந்த 100 நாட்களில் பெரிய அளவில் எந்த கெட்ட பெயரையும் எடுக்கவில்லை. விவாதிக்க தெரியவில்லை.. பதில் சொல்ல தெரியவில்லை என்பது ஜனநாயகத்தில் ஒரு குறைபாடு இல்லை.. லஞ்சம் குறைந்திருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு 100 நாட்களை வெற்றிகரமாக நகர்த்தி இருக்கிறார்கள்.. இது பாராட்டுக்குரியது. தொகுதி மறு வரையறை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி எம்பிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிலிருந்து தவெக மாறாது என்று எதிர்பார்க்கிறேன்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவோம். எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவதை விசிக வரவேற்கிறது. கார் வழங்கும் அரசின் முடிவு நியாயமானது. விருப்பமில்லாதவர்கள் வாங்க மறுத்தால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எங்கள் எம்.எல்.ஏ. ஜோதிமணியின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் விஜய் கார் வழன்க முன் வந்து இருப்பதை வரவேற்கிறோம். கரூர் சம்பவம் போல் ஒரு சம்பவம் நடந்துவிடக்கூடாது என்று நான் அப்படி நடந்துகொண்டேன்… வி.சி.க மாநாட்டில் நடந்த கூட்ட நெரிசலுக்கு தொண்டர்கள் காரணம் அல்ல.. நாங்கள் தான் காரணம்” என்றார்.

You May Also Like

More From Author