25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

Estimated read time 1 min read

25 ஆண்டுகள் தொடர்ந்து அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ‘விக்சித் பாரத் சங்கல்ப் சபா’ நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘சேவா ஜோதி யாத்திரை’ திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதலமைச்சராக பதவியேற்றபோது, தொடர்ந்து 25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றார். இந்த மைல்கல் 140 கோடி மக்களின் இடைவிடாத ஆசிகளால் கிடைத்தது என்றும், இது தனிப்பட்ட பெருமைக்கான நேரமல்ல, மக்களின் சாதனை என்றும் தெரிவித்தார்.

தனக்கு ஆதரவளித்த மக்கள், தொண்டர்கள் மற்றும் அரசியல் சகாக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், விமானக் கடத்தல் முயற்சியைத் தடுத்த விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சலையும் பாராட்டினார். மேலும், 2047-க்குள் இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கான பெரிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

You May Also Like

More From Author