தேர்வு கிடையாது..! தபால் துறையில் வேலை..10ம் வகுப்பு மார்க் வைத்து பணி..!

Estimated read time 1 min read

கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியிருப்பது, தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வித் தகுதி என்ன ஆகிய விவரங்களை பார்க்கலாம்.

நாடு முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2,095 பணியிடங்கள் உள்ளன. டிவிஷன் வாரியாக காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:-

அரக்கோணம் – 34

செங்கல்பட்டு – 68

சென்னை நகர மத்திய டிவிஷன் – 01

சென்னை நகர வடக்கு டிவிஷன் – 02

சென்னை நகர தெற்கு டிவிஷன் – 11

சென்னை நகர தரம் பிரிக்கும் டிவிஷன் – 02

கோயம்புத்தூர் – 41

கடலூர் – 57

தர்மபுரி – 48

திண்டுக்கல் – 77

ஈரோடு – 83

காஞ்சிபுரம் – 51

கன்னியாகுமரி – 30

கரூர் – 45

கோவில்பட்டி – 58

கிருஷ்ணகிரி – 63

கும்பகோணம் – 42

மதுரை – 54

மயிலாடுதுறை – 34

நாகப்பட்டினம் – 35

நாமக்கல் – 71

நீலகிரி – 35

பட்டுக்கோட்டை – 52

பொள்ளாச்சி – 34

புதுச்சேரி – 76

புதுக்கோட்டை – 47

ராமநாதபுரம் – 60

சேலம் கிழக்கு – 42

சேலம் மேற்கு – 46

சிவகங்கை – 32

ஸ்ரீரங்கம் – 40

தாம்பரம் – 60

தஞ்சாவூர் – 54

தேனி – 60

திருச்சி – 74

திருநெல்வேலி – 50

திருப்பத்தூர் – 49

திருப்பூர் – 85

திருவண்ணாமலை – 108

தூத்துக்குடி – 37

வேலூர் – 29

விருதுநகர் – 44

விருத்தாசலம் – 59

கல்வித் தகுதி:

10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது. இந்த காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மார்க் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியை ஒரு பாடமாக படித்து இருப்பது அவசியம். அதாவது தமிழ்நாட்டில் உள்ள பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும். கணிணி அறிவு அவசியம். சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

21.09.2026 தேதிப்படி விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 45 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 43 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு :

கிராம அஞ்சல் பணியாளர்கள் மாதம் ரூ. 12,000 முதல் 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் / கிளை போஸ்ட் மாஸ்டர் மாதம் ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 கட்ட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

ஆன்லைன் ஒருமுறைப் பதிவு (ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்) தொடங்கும் நாள் 31.08.2026 ஆகும். முடிவடையும் தேதி 19.09.2026 அன்று மாலை 05.00 மணி வரை. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் 02.09.2026 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.09.2026 அன்று மாலை 05.00 மணி வரை ஆகும். ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் 23.09.2026 முதல் 24.09.2026 அன்று மாலை 05.00 மணி வரையிலும் திருத்தம் செய்து கொள்ள முடியும்.

தேர்வு அறிவிப்பை படிக்க: https://indiapost.gov.in/gdsonlineengagement

Please follow and like us:

You May Also Like

More From Author