ஏர்போர்ட்டில் வேலை..! மாதம் ரூ.70,000 சம்பளம்..!

Estimated read time 1 min read

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது விமான நிலைய வேலைவாய்ப்பு பயிற்சிகளையும் வழங்குகிறது. இது முழுக்க முழுக்க கட்டணமில்லா பயிற்சி மட்டுமே.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலமாக கேபின் க்ரூவ் (Cabin Crew), விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி, (Air Cargo Introductory+ DGR) பயணியர் சேவை மற்றும் பயணசீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி, (Passenger Ground Services + Reservation Ticketing) போக்குவரத்து அடிப்படை பயிற்சி, (Foundation in Travel and Tourism) மற்றும் போன்ற பணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். மேற்கண்ட பணிகளுக்கு பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த 18 முதல் 23 வயது நிரம்பி பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் இப்பயிற்சிக்கான கால அளவு ஆறு மாதமும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையை தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் பட்சத்தில் IATA- International Air Transport Association-Canada சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், பயிற்சி சான்றிதழ் உள்ளவார்கள் தனியார் விமான ឈប់ (Indigo, Airlines, Spice Jet, Go First, Air India), ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.20,000 முதல் ரூ.22,000 வரை பெற முடியும். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை சம்பளம் வழங்கப்படலாம்.

இப்பயிற்சியில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author