மேட்டூர் அணையை நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்…!

Estimated read time 0 min read

மேட்டூர் அணையை நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை சேலம் செல்கிறார்.

டெல்டா பாசனத்திற்காக 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு முடிவு.

இதற்கான ஏற்பாடுகளை நீர்வளத்துறை, சேலம் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அணையின் வலது கரையில் விழா மேடை அமைக்கப்படவுள்ளது. நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். முதலமைச்சரான பிறகு முதல்முறையாக விஜய் சேலம் செல்லவுள்ளார். இதனால் பாதுகாப்பு வசதி பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறுவை, சம்பா, தாளடி முப்போக சாகுபடிக்கு ஜூன் முதல் ஜனவரி வரை தண்ணீர் திறக்கப்படும். இப்போதுவரை மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா அரசு நீர் திறக்காவிடினும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.5 அடியாக உள்ளது.

விநாடிக்கு 9,035 கனஅடி நீர் அணைக்கு வருகிறது. அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இதனால் அடுத்த 3 மாதங்கள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. இதையடுத்து நாளை (செப்டம்பர் 1) முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார்.

You May Also Like

More From Author