எஸ்சிஓ அமைப்பின் இதர உறுப்பு நாடுகளுடன் சீனாவின் ஏற்றுமதி அதிகரிப்பு

கடந்த சில ஆண்டுகளாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இதர உறுப்பு நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக தொடர்பு நிலையாக அதிரித்து வருகிறது.

சுங்கத்துறை தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் எஸ்சிஓ அமைப்பின் இதர நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 2.42 லட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 14.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. இருதரப்பு ஒத்துழைப்பின் மீள்தன்மை மற்றும் உயிராற்றலை இது வெளிப்படுத்தியுள்ளது.

அண்மையில் வாகன உதிரி பாகங்களை ஏற்றிச் செல்லும் சர்வதேச சரக்கு ரயில் ஒன்று சீனாவின் லியன்யூன்காங்கிலுள்ள சர்வதேச சரக்கு புழக்க பூங்காவிலிருந்து புறப்பட்டு, 15 நாட்கள் பயணத்துக்குப் பிறகு கிர்கிஸ்தானைச் சென்றடைய உள்ளது. இந்தத் திறன்மிக்க சர்வதேச சரக்கு போக்குவரத்து பாதையானது, எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கான சீன இயந்திரப் பொருட்களின் ஏற்றுமதியை பெரிதும் விரைவுபடுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author