ஷிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணியை மேம்படுத்தி தேசிய சூழலியல் அரணை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஷிசாங் சூழலியல் அரணின் பாதுகாப்பு மற்றும் கட்டுமானத் திட்டத்தை சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் ஷிசாங்கில் காடுகள் பரப்பின் விகிதம் 12.61 விழுக்காட்டுக்கு மேலாகவும், புல்வெளியில் ஒட்டுமொத்த தாவரப் பரப்பின் விகிதம் 50 விழுக்காட்டுக்கு மேலாகவும் நீர் மண் பராமரிப்பு விகிதம் 92.22 விழுக்காடாகவும் இயற்கை பாதுகாப்பு நிலப்பரப்பு முழு பிரதேச நிலப்பரப்பின் மூன்றில் ஒரு பகுதிக்கு மேலாகவும் இருக்க வேண்டும் என்று இத்திட்டத்தில் கோரப்பட்டுள்ளது. மேலும், சூழலியல் பாதுகாப்பு அரண் முறைமை மேம்படுத்தப்பட்டு, வட மேற்கு ஷிசாங்கில் சியாங்தாங் பீடபூமி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மீட்பு உள்ளிட்ட திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். இயற்கை பாதுகாப்பு பகுதி முறைமை முழுமைப்படுத்தப்பட்டு, ஆல்பைன் சூழலமைப்பையும் மலைப்பகுதியில் பனிமண்டலத்தையும் தனிச்சிறப்பாகக் கொண்ட தேசிய பூங்காவின் கட்டுமானம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030க்குள் ஷிசாங்கில் காடுகள் பரப்பின் விகிதம் அதிகரிக்க சீனா திட்டம்
Estimated read time
0 min read
You May Also Like
சீன-அங்கோலா அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
March 15, 2024
சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
July 23, 2026
சீனாவில் புதிய எரியாற்றல் துறையின் உயர்வேக வளர்ச்சி
August 26, 2025
