சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், இந்தோனேசிய அரசுத் தலைவர் பிரபோவோ சுபியாண்டோவுடன் மே 24ஆம் நாளிரவு ஜகார்த்தா நகரில் நடைபெற்ற சீன-இந்தோனேசிய தொழில் மற்றும் வணிகத் துறையின் இரவு விருந்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இதில் இரு நாடுகளின் தொழில் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது லீச்சியாங் கூறுகையில், இவ்வாண்டு சீன-இந்தோனேசியத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகவும், பாண்டுங் மாநாடு நடைபெற்றதன் 70ஆவது ஆண்டு நிறைவாகவும் திகழ்கிறது. இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ள சீனா விரும்புவதாகவும், இரு நாட்டுத் தொழில் மற்றும் வணிகத் துறைகள் தொடர்புகளை வலுப்படுத்தி, மேலதிக ஒத்துழைப்புச் சாதனைகளைப் பெற விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பிரபோவோ கூறுகையில், சீனாவுடன் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பாண்டுங் மாநாட்டின் எழுச்சியைப் பரவல் செய்து, ஆசியாவின் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழுமையைப் பேணிக்காக்க இந்தோனேசியா விரும்புவதாக தெரிவித்தார்.