செர்பியாவின் டானூப் நடைப்பாதை விரைவு நெடுஞ்சாலை சேவை துவக்கம்

Estimated read time 1 min read

செர்பியாவில் டானூப் நடைப்பாதை எனும் விரைவு நெடுஞ்சாலை சேவையின் துவக்க விழா, 30ஆம் நாள் காலை நடைபெற்றது. இந்த சாலையில் வாகனத்தில் சென்ற செர்பிய அரசுத் தலைவர் வுசிக் துவக்க நிகழ்ச்சியில் உரைநிகழ்த்திய போது இத்திட்டப்பணி செர்பியாவின் வளர்ச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார். நாட்டின் நன்மைகளை நனவாக்குவதற்கும் உள்நாட்டின் சுற்றுலா துறை வளர்ச்சி மற்றும் கிழக்குப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் டானூப் நடைப்பாதை திட்டப்பணி முக்கிய பங்காற்றுமென அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விரைவு நெடுஞ்சாலை 31ஆம் நாள் முதல் அதிகாரப்பூர்வமாகச் சேவையளிக்குமென வுசிக் அறிவித்தார்.

 

You May Also Like

More From Author