தமிழக சட்டமன்றத்தில், காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே உரையாற்றிய அவர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அரசின் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.
வெறும் சாலைகளும் தொழிற்சாலைகளும் மட்டுமே ஒரு மாநிலத்தின் வளர்ச்சியைத் தீர்மானித்துவிட முடியாது எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால் மட்டுமே புதிய தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் தொழில்கள் முறையாக நடைபெறும் என்றும் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தை மதித்து நடக்கும் சாதாரண மக்களுக்கு காவல் துறை உற்ற நண்பனாகவும், குற்றங்களிலும் உரிமை மீறல்களிலும் ஈடுபடுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் திகழ வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பதிலுரை:’சட்டத்தின் முன் அனைவரும் சமம்; காவல் துறை தலையீடின்றி செயல்படும்’
