சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், “காவலர்களுக்கு பணி சுமையை குறைக்கும் வகையில், அரசு தேவையான நடவடிக்கையை எடுக்கும். காவல்துறையினரின் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்கும். தீயணைப்பு மற்றும் மீட்பு துறையை நவீன துறையாக மாற்றும் முயற்சி எடுக்கப்படும்.
அரசு ஆளும் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதனை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கும். குற்றவாளிகள் மீது எந்தவித சமரசமும் இல்லாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் குற்றவாளிகளாக மாறுவதற்கு முன்பே சமூக தடுப்புகள் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
