”காங்கிரஸும் பாஜகவும் ஒன்னுதான்!” கேரளா மண்ணில் அம்பலமான ரகசியக் கூட்டணி…. பினராயி விஜயனின் காரசார தாக்குதல்….!! 

Estimated read time 1 min read

கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட்டுகளை முற்றிலுமாக அழிப்பதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறவில்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மிக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். கண்ணூரில் நடைபெற்றப் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மாநிலத்தில் ஆளும் எல்.டி.எஃப் (LDF) கூட்டணியைப் பலவீனப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கைகோர்த்துச் செயல்பட்டு வருவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எல்.டி.எஃப் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்ததில் இருந்தே, அனைத்து வலதுசாரி சக்திகளும் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அவர் சாடினார். மக்கள் ஆதரவோடு இயங்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளாலும் சதித்திட்டங்களாலும் ஒருபோதும் வீழ்த்திவிட முடியாது என்று அவர் ஆணித்தரமாக சுட்டிக்காட்டினார்.

மேலும், தன் மீது சுமத்தப்பட்டு வரும் பல்வேறு வழக்குகள் மற்றும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், தான் எந்த ஒரு வழக்கிற்கும் பயப்படப் போவதில்லை என்றும், தன் மீதான அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாகவே எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்றும் உறுதியளித்தார். எதிர்க்கட்சிகளின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து மக்களுக்காகச் பணியாற்றுவேன் என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்தார்.

காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு முக்கிய எதிர்க்கட்சிகளும் இணைந்து கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராகச் செயல்படுவதாகப் பினராயி விஜயன் போட்டுடைத்துள்ள இந்தத் தகவல் கேரளா மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து எல்.டி.எஃப் கூட்டணி தொடர்ந்து வலுவாகச் செயல்படும் என அவர் பேசியிருப்பது கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author