“இந்த அமைச்சர்களை பற்றி என்கிட்ட கேட்காதீங்க!” – பிரஸ் மீட்டில் துரைமுருகன் கலாய்!

Estimated read time 0 min read

தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் அமைச்சர்கள் சிலர், மு.க.ஸ்டாலின் மிசா கைது குறித்து பேசியதைப் பற்றி ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு துரைமுருகன் தனக்கே உரிய பாணியில், “அய்யய்யய்யோ, கையெடுத்து கேட்டுக்கிறேன்… இந்த அமைச்சர்கள் பற்றியெல்லாம் என்கிட்டக் கேட்காதீங்க. பொதுவா கேளுங்க… ஒரு அமைச்சருக்கும் வாரத்துல ஏழு நாளுனுகூடத் தெரியல. அப்பேர்ப்பட்ட அமைச்சருங்க இருக்காங்க. இஸ்மாயில் கமிசன் அறிக்கையைப் படிக்கச் சொல்லுங்க. அதுல தளபதி(ஸ்டாலின்) வழக்கு குற்றப்பத்திரிகைய எடுத்துப் போட்டிருக்காங்க. ஒரு மந்திரிக்கும் கைட்லைன் தெரியல. சட்டமன்றமாவே இல்ல. சூட்டிங் செட் மாதிரி இருக்கு.” என்று கிண்டலாகவும் நறுக்சுருக்காகவும் பேசினார்.

You May Also Like

More From Author