சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மே 29ஆம் நாள் பிற்பகல் கல்வித்துறையில் முன்னணி நாட்டைக் கட்டியமைப்பது குறித்து ஐந்தாவது கூட்டு படிப்பை மேற்கொண்டுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இப்படிப்புக்குத் தலைமை தாங்கிய போது கூறுகையில், கல்வித்துறையில் முன்னணி நாட்டைக் கட்டியமைப்பது சோஷலிச நவீனமயமாக்க வல்லரசைப் பன்முகங்களிலும் உருவாக்குவதற்கு முதன்மைப் பணிகளில் ஒன்றாகும். உயர் நிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தன்னம்பிக்கையை அடையும் முக்கியமான ஆதரவாகவும், அனைத்து மக்களின் கூட்டுச் செழிப்பை மேம்படுத்தும் பயனுள்ள வழியாகவும் உள்ளது. சீன பாணியிலான நவீனமயமாக்கலுடன் சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியைப் விரிவாக முன்னேற்றும் அடிப்படை திட்டமாக இது திகழ்கின்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்வி கொள்கைகளைப் பன்முகங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மக்களை மையமாகக் கொண்டு கல்வி வளர்ச்சியை முன்னேற்றி, சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியின் விரிவான முன்னேற்றத்திற்கு வலுவான ஆதரவை வழங்க வேண்டும் என்றார்.