நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் 2026 ஹாக்கி உலகக்கோப்பை தொடரில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் இரண்டாம் சுற்றோடு வெளியேறியுள்ளன.
தொடர் தோல்விகளால் ஐந்து தசாப்த கால உலகக்கோப்பை அரையிறுதி கனவு தகர்ந்துள்ள நிலையில், இந்திய ஹாக்கி நிர்வாகத்தின் மீதும் அதன் பொறுப்புக்கூறல் மீதும் முன்னாள் நட்சத்திர கோல்கீப்பர் பி.ஆர். ஶ்ரீஜேஷ் தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹாக்கி உலகக்கோப்பை தோல்வி: ஹாக்கி இந்தியா அமைப்பை கடுமையாக விமர்சித்த பி.ஆர். ஶ்ரீஜேஷ்
