ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மருக்கு சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 20 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்தனர், மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.
“ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு X இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்குவதாகவும் பிரதமர் அறிவித்தார்.
ஜெய்சால்மர் பேருந்து தீ விபத்து கோரம்: 20 பேர் உயிருடன் கருகி உயிரிழப்பு
