இந்தியாவில் வேற லெவலில் டிரெண்டான கரப்பான் பூச்சி ஜனதா தள பார்ட்டிக்கு தடை..  

Estimated read time 0 min read

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அண்மையில் வேலை இல்லாத இளைஞர்களை பார்த்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நிலையில் பின்னர் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து விளக்கமும் கொடுத்தார்.

இந்த நிலையில் அவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அபிஜித் தீப்கே என்ற வாலிபர் கரப்பான்பூச்சி ஜனதா தளம் என்ற பார்ட்டியை தொடங்கினார். குறுகிய காலத்தில் அந்த கட்சியில் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்த நிலையில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்தனார்.

இவர்களின் கொள்கைகளாக கட்சி மாறுபவர்கள் 20 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது உள்ளிட்ட விஷயங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதே நேரத்தில் கரப்பான் பூச்சி ஜனதா தளம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டான நிலையில் தற்போது மத்திய அரசாங்கம் இந்த அமைப்புக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும் இதன் எக்ஸ் இணைய பக்கத்தை தற்போது மத்திய அரசாங்கம் அதிரடியாக நீக்கி ஆக்சன் எடுத்து உத்தரவிட்டுள்ளது.

You May Also Like

More From Author