சென்னை விமான நிலையத்தில் கேப் பிக்கப் பிளாசா

Estimated read time 1 min read

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக முதல் முனையத்திற்கு ( T1 ) முன்பு 23 கோடி ரூபாயில் பிக்கப் பாயிண்ட் பிளாசா அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக முதல் முனையத்திற்கு ( T1 ) முன்பு 23 கோடி ரூபாயில் பிக்கப் பாயிண்ட் பிளாசா அமைக்கப்பட்டுள்ளது. இதனை டெல்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு. பிக்கப் பாயிண்ட் பிளாசாவில் ஒரே நேரத்தில் 28 வாகனங்கள் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 150 பயணிகள் ஓய்வெடுக்க இருக்கைகள், குடிநீர், விமான வருகை-புறப்பாடு அறிவிப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. டெர்மினல் 1-க்கு சுமார் 30 மீட்டர் தொலைவில் இந்தப் பிளாசா அமைந்துள்ளது. இதனால் பயணிகள் நீண்ட தூரம் நடந்து சென்று தங்களுக்கான வாகனத்தை தேட வேண்டிய அவசியம் இருக்காது.

முதற்கட்டமாக OLA, UBER, FASTRACK, RAPIDO, RED TAXI போன்ற முன்பதிவு டாக்ஸிகள் மட்டுமே இந்த புதிய பிளாசாவைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author